காக்கா

ஒரு  காக்கா எனக்கு மிகவும் நண்பனாகிவிட்டது .இந்த கதை அதை பற்றியது தான் இந்த காக்காவிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்பதை விட அது எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தது என்றே சொல்லலாம்  .அந்த காக்கா சற்று சாம்பல் நிறத்திலே இருக்கும் ஆனால் சில இடங்கள் பார்க்க கருப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நான் தினமும் குளிப்பது வழக்கம் ஆனால் குளிர்ந்த நீரில் குளிக்க மாட்டேன் சற்று வெது வெதுப்பாக இருக்க வேண்டும் . குளித்துவிட்டு ஜன்னலின் அருகில் வந்து நின்று தலைய துடைப்பேன்.ஜன்னலுக்கு வெளியே நிறைய மரங்கள் அதில் நிறைய காகங்கள் வருவதும் போவதுமாக இருக்கும் எப்போதும் காகங்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். காகங்களை யாருக்கும் அதிகம் பிடிக்காது இல்லை சுத்தமாகவே பிடிக்காது . ஏனென்றால் அவை கருப்பு என்பதாலோ என்னவோ தெரியவில்லை . நான் குளித்துவிட்டு வந்தால் என்னை பார்க்க மரத்திலிருந்து ஒரு காக்கா வரும் .வந்து என் ஜன்னலின் அருகே உட்கார்ந்துவிடும் நான் தலை துவட்டிவிட்டு johnsons buds ஆல் காது குடைவது வழக்கம் .நான் காது குடைவதை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் . சிரித்தபடியே அதை பார்த்துக்கொண்டிருப்பேன் .பிறகு buds ஆல்அடிப்பேன் அது பறந்துவிடும் .இது  தினமும் நடக்கும் விஷயம்  பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் விஷயமும் கூட.

தினமும் நான் அதை அடிக்க முயற்சிப்பேன் ஆனால் அதற்குள் பறந்துவிடும் . என்ன குறி வைக்கிறான் என்று என்னைப்பற்றி நிச்சயம் கிண்டலடித்திருக்கும் .. இருந்தாலும் பயமில்லாமல் தினமும் வந்து விடும் .ஒரு நாள் எனக்கு அதின் மேல் கோபம் வந்துவிட்டது . எனவே அதை அடிக்க முடிவு செய்தேன் ,ஜன்னலின் அருகே சில கற்களை கொண்டுவந்து வைத்துக்கொண்டேன் .அடுத்த நாள் குளித்துவிட்டு ஆவலோடு ஜன்னலுக்கு வந்தேன் .சில நொடிகளில் எதிர்பார்த்த படியே அந்த காக்கா என் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்து என்னையே பார்க்க ஆரம்பித்தது . அதற்கு தெரியாமல் கற்களை எடுத்தேன் ஆனால் அது என்னையே பார்த்துக்கொண்டிருந்தது , மெதுவாக காது குடைந்த படி இருந்த நான் அது எதிர்பார்க்காத நேரத்தில் மிகவும் பலம் கொண்டு அந்த கல்லை அதன் மீது வீசினேன்,  johnsons buds என்று நினைத்து கல்லை எதிர் பார்க்காத அந்த காக்கா… பறப்பதற்குள் கல் அதன் உடலை தாக்கியது . சுருண்டுவிழுந்த அதனால் எழுந்து பறக்க முடியவில்லை .சில நொடிகளில் அதை பத்து காகங்கள் சூழ்ந்துவிட்டன . எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது சுமார் அரை மணி நேரம் வரை அதனால் பறக்க முடியவில்லை . அதன் பிறகு சில வாரங்கள் அதை நான் பார்க்கவில்லை ,இறந்துவிட்டது என்றே நினைத்துக்கொண்டேன் . திடீரென்று ஒருநாள் என் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது அந்த காகம் , அதற்கு என்மீது கோபம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்  budsஆல்அதை அடிப்பதை கூட நிறுத்திக்கொண்டேன் .

பின்பு ஒரு நாள் துவைத்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்றேன்,அது மாலை நேரம் சில்லென்று  காற்று அடித்தது. ஒரு துணி அருகில் இருந்த வேப்ப மரத்தில் மாட்டி இருந்ததால் அதை எடுக்க முயற்சித்தேன் .அப்போது அந்த காகத்தை பார்த்தேன் கூட்டில் இருந்த தன குஞ்சிற்கு இரையை ஊட்டிக்கொண்டிருந்தது .என்னை பார்த்ததும்  பறந்துவிட்டது ,குஞ்சும் அமைதியாகவே இருந்தது .அதன் அருகில் சென்று பார்த்தேன் அது என்னை அதிர்ச்சியடைய செய்தது . உறைந்து போய் நின்றேன், அந்த காகத்தை பார்த்தேன் சற்று தொலைவில் இருந்து என்னையேபார்த்துக்கொண்டிருந்தது . அந்த காகத்தின் கூடும் அதன் குஞ்சும்  மிகவும் அழகாக இருந்தது , தன கூட்டை மிகவும் நேர்த்தியாக கட்டியிருந்தது ,நீண்ட நேரம் நான் அந்த கூட்டையே பார்த்துகொண்டிருந்தேன். அந்த காகம் என்னை நிறைய யோசிக்க வைத்தது யோசனை தந்தது.காரணம்  குச்சிகளைவிட நான் அதன் மீது வீசி எறிந்த அத்தனை johnsons budsம்அந்த கூட்டில் அழகான தூண்களாக தெரிந்தது .

4 மறுமொழிகள் »

  1. 1
    pappukutty சொல்கிறார்:

    mmm nice story…..keep up the gud work Mr.k.samy

  2. 2
    beryle சொல்கிறார்:

    One question! Is that a serious story or just a joke?

  3. 3
    nizar சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது .. தொடருங்கள்..

  4. 4
    தன்னிலவன் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் குட்டிசாமி
    http://thannilavan.wordpress.com/


RSS Feed for this entry

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.